டொனால்ட் டிரம்புக்கு அபராதம் விதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்தி வரும் ‘டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் நிதியை டிரம்ப் தனது சொந்தசெலவுகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டபட்டது

இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளை மூடப்பட்டது. இது தொடர்பாக நடந்த வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவரக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப் தனது அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் (இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 42 கோடி அபராதம் விதித்துள்ளது.

இத்தகைய அறக்கட்டளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என இந்த வழக்கில் நீதிபதி சேலியன் ஸ்கார்புலா உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு படையினருக்காக வசூலிக்கப்பட்ட பணம் டிரம்ப் தேர்தல் செலவுக்கு 2016-இல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டிரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத வேறு எட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.SE

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!