இந்திய பெண்கள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடைப்பெற்றது இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 194ஓட்டங்களுடன் சகல விக்கட்களையும் இழந்தது அதிகபட்சமாக அணி தலைவி ஸ்டெபானி டெய்லர் 79 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டும், ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.

அடுத்து 195ஓட்டங்களை இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் நிலைத்து நின்று துடுப்படுத்தாடினர் அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். 141 ஓட்டங்கள் உயர்ந்த போது ஜெமிமா ரோட்ரிக்ஸ் 69 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். மந்தனா 63 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 74ஓட்டங்களை பெற்றநிலையில் நிலையில் ஆட்டமிளந்தார் அடுத்தப்படியாக மிதாலி ராஜ் 20 ஓட்டங்களும் , பூனம் ராவுத் 24 ஓட்டங்களை எடுத்து வெளியேறினர்.

இந்திய அணி 42.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 51-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய வீராங்கனை மந்தனா 2 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார். அவர் 4 சதம் 17 அரைசதம் உள்பட 2,025 ஓட்டங்களை எடுத்துள்ளார். அத்துடன் ஒருநாள் போட்டியில் வேகமாக 51 இன்னிங்சில் 2 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 3-வது வீராங்கனை என்ற பெருமையை மந்தனா பெற்றார். அவரே ஆட்டநாயகி விருதையும் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரை 2-1 என்ற ஆட்டக்கணக்கில் கைப்பற்றியது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரில் முதலாவது 20 ஓவர் போட்டி செயின்ட் லூசியாவில் நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!