அரசாங்கம் மக்களுக்காக செயற்படவில்லை – கோட்டா!!

5 வருடங்கள் ஆட்சியில் நாட்டை காப்பாற்ற முடியாதவர்கள், இன்று மீண்டும் ஆட்சியை கோருகின்றனர் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மதுகம நகரில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போது உள்ள தேவையற்ற அனைத்து வரிகளும் இரத்துச் செய்யப்படும்.
வற் வரி 8 சத வீதம் வரையில் குறைக்கப்படும்.
அதிக முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் மற்றும் அதிக வியாபாரங்களை ஆரம்பிப்பதன் மூலம், அரசின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
வரி செலுத்தும் போது இலகுவாக செலுத்த முடியுமானால், அநேகமானோர் வரியை செலுத்துவர்.
இலகுவாக முகாமைத்துவம் செய்து கொள்ள முடியும்.
இதன் மூலம், தேசிய வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
எனினும், இந்த அரசாங்கத்திடம் இது தொடர்பில் எவ்வித புரிதலும் இல்லை.
தேவை இருந்தால் இவை அனைத்தையும் மேற்கொள்ள முடியும்.
நாம் சவால்களை ஏற்று அவற்றை வெற்றி கொண்டவர்கள்.
செய்து விட்டுதான் சொல்வோம்.
5 வருடங்கள் அதிகாரத்தில் இருந்து இவற்றை செயற்படுத்தாமல், இவற்றை செய்ய மீண்டும் அதிகாரத்தை கோருவார்களாயின், அது தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் அனைவரும் இதுவரை மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்திருந்தீர்கள். என் மீது நம்பிக்கை வையுங்கள். என தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!