கூட்டமைப்பிற்கு தகுதியில்லை : சங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திலிருந்து இராஜினாமா செய்ய வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக விழுமிங்களை மீறிச் செயற்பட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்திலிருப்பதற்கு தகுதி கிடையாது என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரிவலியுறுத்தியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கண்டிக்கு இன்று காலை விஜயம் செய்தார்.

அஸ்கிரியப்பீட மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்த ஆனந்தசங்கரி, சமகால அரசியல் குறித்தும் நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாகவும் நீண்டநேரம் கலந்துரையாடினார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், திருட்டுத்தனமாக வாக்குகளில் அவர்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியதாகவும் ஆனந்தசங்கரி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

‘2004ஆம் ஆண்டில் ஒரு இணக்கத்திற்கு வர தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வந்தது. அதாவது அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒரே கூட்டணியில் போட்டியிடுவதற்கான முடிவெடுக்கப்பட்டது. எனினும் சம்பந்தனும் சேனாதிராஜாவும் கிளிநொச்சிக்கு சென்று சு.ப. தமிழ்ச் செல்வனின் யோசனையின்படி வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுவை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே தாக்கல் செய்வதாக சம்பந்தன் ஊடகங்களுக்கு அறிவித்தார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் கிளிநொச்சிக்கு சென்றபோது, தமிழ்ச் செல்வனின் யோசனையை ஏற்றுக்கொண்டதோடு, தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும் ஏற்றுக்கொண்டனர். விடுதலைப் புலிகள் தேசியத் தலைவர்கள் என்றும் அறிவித்தனர். விடுதலைப் புலிகளுக்கு அவர்கள் முழுமையான ஆதரவை வழங்கினர். வேறு கட்சிகளுக்கு அவர்கள் தேர்தல் பிரசாரங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. 22 உறுப்பினர்கள் அவர்கள் வெற்றியீட்டினார்கள். ஆனால் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சிங்களத் தலைவர்கள் செய்த பிழை என்னவென்றால் எதிர்தரப்பு வேட்பாளர்களுக்கு அவர்கள் அனுமதி வழங்காமை ஏன் என்ற கேள்வியை எழுப்பத் தவறினர்….என்று இதன்போது குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!