7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் மற்றும் ,ஒரு டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஆரம்பமானது.

டோஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 194 ஒட்டகளுக்கு சகல விக்கட்டுகளும் இழந்தது ரமத் ஷா (61ஓட்டங்கள்), இக்ரம் அலிகில் (58 ஓட்டங்கள் ), அஸ்ஹார் ஆப்கன் (35 ஓட்டங்கள் ) தவிர மற்றவர்கள் சொற்ப ஓட்டங்கடலில் வீழ்ந்தனர். அணித்தலைவர் ரஷித்கான் பூச்சிய ஓட்டத்தில் வெளியேறி இர்ருந்தார் . வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜாசன் ஹோல்டர், ஷெப்பர்டு, ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்திருந்தனர்.

தொடர்ந்து துடுப்பெடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி 46.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6ஓட்டங்களில் கன்னி’ சதத்தை நழுவ விட்ட ரோஸ்டன் சேஸ் 94 ஓட்டங்களில் (115 பந்துகளில் 11 பவுண்டரி) ஆட்டமிழந்தார் விக்கட் காப்பாளர் ஷாய் ஹோப் 77 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக சந்தித்த 10-வது தோல்வி இதுவாகும். 2-வது போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. சே

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!