மஹிந்த அரசாங்கம் பிரிக்கமுடியாத நாட்டில் வாழ்வதற்கு சூழலை உருவாக்கவில்லை-சம்பந்தன்

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டில் வாழ்வதற்கு ஏதுவான சூழலை தமிழ் மக்கள் உட்பட சகல மக்களுக்கும் வழங்க தவறியமை பிரதான தவறு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மஹிந்த அரசாங்கம் 17 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை நீக்கி 18 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியமை, அரசியலமைப்பு பேரவையை இல்லாதொழித்தமை போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விசேட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இனபிரச்சினையை தீர்க்கும் விடயத்தில் மஹிந்த அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பையும் வழங்கிய செயற்பட்டிருந்த போதும் அதனை அவர்கள் உதாசீனப்படுத்தியதாகவும் சம்பந்தன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் கொள்கை பிரகடனத்திலும், நிகழ்ச்சித் திட்டங்களிலும் நம்பிக்கை வைத்து அவரை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனவே வடக்கு, கிழக்கு தமிழ் தமிழ் மக்கள் அன்னச் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது (சே)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!