பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை பாதுகாக்க சீனா, பிரான்ஸ் உறுதி     

அமெரிக்காவால் கைவிடப்பட்ட பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளதாக, பிரான்ஸ் மற்றும் சீன தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

சீனத் தலைநகர் பீஜிங்கில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரானும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில்
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

‘பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச நாடுகள் பரிஸில் 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தை பாதுகாப்பதில் பிரான்சும், சீனாவும் உறுதியாக உள்ளன.

பருவநிலை மாற்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு தெளிவான வழிகாட்டும் அந்த ஒப்பந்தம், திரும்பப்பெற முடியாதது ஆகும்.

பரிஸ் ஒப்பந்தத்தை முழுமையாகவும், திறனுடனும் செயற்படுத்துவதில், உலக நாடுகளின் ஒத்துழைப்பைப்பெற பிரான்ஸும், சீனாவும் தொடர்ந்து பாடுபடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, ஷாங்காய் நகரில் நடைபெறும் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள இமானுவல் மெக்ரன், பீஜிங்கில் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது, இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

மேலும், கடந்த ஜனவரி மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, சீனாவில் அணுமின் நிலையம் அமைத்துக்கொடுக்கப்படும் என சீன ஜனாதிபதியிடம் மெக்ரான் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!