குடி மக்கள் வரவு செலவுத்திட்ட அறிமுக விழா!!

கிழக்கு மாகாண குடி மக்கள் வரவு செலவுத்திட்ட அறிமுக விழா, திருகோணமலை மாவட்டத்தில், இன்று நடைபெற்றது.

குடி மக்கள் வரவு செலவுத்திட்டம் – பொதுப் பொறுப்புக்கூறல் மற்றும் அதிகரித்த குடிமை பங்கேற்புக்கான ஒரு முக்கிய கருவி, பொது மக்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் வரவு செலவுத்திட்டம், மிகவும் எளிமையான குறைந்த தொழில்நுட்ப வடிவத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பொது நிதி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது மற்றும் பயன்படுத்தப்படுகிறது என்பதை, மக்கள் நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை தலைமைச் செயலாளர் சரத் அபேகுணவர்தன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நிதி ஆணையத்தின் தலைவர் உதிதா ஹரிலால் பாலிஹக்கரா, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அரச பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண குடி மக்கள் வரவு செலவுத்திட்டம் தொடர்பில், கல்வியாளர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள், இறுதி ஆவணத்தின் வளர்ச்சியை பார்வையிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், மாகாண சபை நிதி எங்கிருந்து வருகிறது, அவை எதற்காக செலவிடப்படுகின்றன என்பதை, ஆக்கப்பூர்வமாகவும் எளிமையாகவும் விளக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆதரவளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்திற்கு, வரவு செலவு திட்டத்தில் 29 ஆயிரத்து 147 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கு, பாரிய அளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விபரத்தை, தேர்தல் காலத்தின் பின்னர் மக்கள் பார்வையிட முடியும் எனவும், கிழக்கு மாகாண சபை தலைமைச் செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!