வவுனியாவில் டிப்பர் வாகனம் மோதி சிறுமி பலி!!

வவுனியா இலுப்பையடி பகுதியில், டிப்பர் வாகனம் மோதியதில், சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து, வவுனியா நோக்கி சென்ற டிப்பர் வாகனம், இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த, தாய் மற்றும் மகளை மோதியது.

இதன் காரணமாக, 13 வயதான சிறுமி சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், தாயார் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், டிப்பர் வாகன சாரதி தப்பியோட முற்பட்ட போது, பொலிஸார் மற்றும் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் துரத்தி பிடித்துச், பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அத்துடன், அவ்விடத்தில் கூடிய இளைஞர்கள், டிப்பர் வாகனத்தை சேதப்படுத்தியுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!