அம்பாறையில், முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு   

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடைமழையின் பின்னர் ஏற்பட்ட வெள்ள நீர் குறைவடைந்த போதிலும் முதலைகளின் நடமாட்டம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

சம்மாந்துறை சவளைக்கடை நற்பிட்டிமுனை பகுதிகளில் முதலைகளின் நடமாட்டத்தின் காரணமாக மீன் பிடிபாடு அப்பகுதியில் பெருமளவில் குறைவடைந்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

மீன்களின் பிடிபாடு வெகுவாகக் குறைவடைந்தமைக்கான காரணம் மீனவர்களின் வலைகளை முதலைகள் சேதமாக்குவதும் அச்சுறுத்தல் காரணமுமாகும், என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் பருவ மழை பெய்தமையினால் அங்குள்ள ஆறு, குளம் ஆகியவற்றில் அதிகளவான மீனினங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!