மட்டக்களப்பில் ஒருவர் சடலமாக மீட்பு       

மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் உள்ள மரமொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அருணோதயம் பாடசாலைக்கு பின்புறமாகவுள்ள மரமொன்றில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் 7ஆம் குறுக்கு பாரதி வீதியை சேர்ந்த 21வயதுடைய சிவலிங்கம் துசாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளம் குடும்பஸ்தரின் மரணம் தொடர்பான மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!