பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது அமெரிக்கா     

பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2015 ஆம் ஆண்டில் 196 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற முக்கிய கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்து விவாதித்து கரியமில வாயு வெளியேற்றத்தை முடிந்த அளவு குறைப்பது குறித்து ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பொருளாதார முன்னேற்றத்தை காரணம் காட்டி சூழலை பாதிக்கும் வகையில் செயற்படும் தொழிற்சாலைகளை வரன்முறைபடுத்த வேண்டும்;,உலக நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டே தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் குறித்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா இருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றபோது, இந்த ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்தார்.

காரியமில வாயு வெளியேற்றத்தால் உலகிற்கு பாதிப்பில்லை எனவும் இது அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்தை தடுக்க நடக்கும் சதி எனவும் கூறி வந்தார்.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்தார்.

ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஐ.நா.விடம் அமெரிக்கா நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் போம்பியோ, ‘பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஐ.நா.விடம் அமெரிக்கா முறைப்படி தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு இதே நாளில் அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக விலகிவிடும்’ என குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!