அம்பாறை நற்பிட்டிமுனையில்,ஜ.தே.கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு   

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் நடராசா நந்தினியின் தலைமையில் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை அம்பாறை நட்பிட்டிமுனையில் திறந்து வைக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் சட்டத்தரணியுமான எம்.எஸ்.றசாக்கினால் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், நற்பிட்டிமுனை மகளிர் சங்கங்கள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!