நேற்று வென்றது அவுஸ்திரேலியா

பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கிண்ண தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து அவுஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். பிஞ்ச் 82 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் 107 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஸ்மித் (10), மேக்ஸ்வெல் (20), ஷான் மார்ஷ் (23), கவாஜா (18), அலெக்ஸ் ஹேரி (20) கவுல்டர் நைல் (2) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க அவுஸ்திரேலியா 49 ஓவரில் 307 ஓட்டங்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார். முகமது அமிரின் அபார பந்து வீச்சால் கடைசி 48 பந்தில் 39 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து பின்னடைவை சந்தித்தது.

அதன் பின்னர், 308 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 53 ஓட்டங்களில் வெளியேறினார்.

பாபர் அசாம் 30 ஓட்டங்களிலும், முகமது ஹபீஸ் 46 ஓட்டங்களிலும், ஹசன் அலி 35 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அணித்தலைவர் சப்ராஸ் அகமதும், வஹாப் ரியாசும் வெற்றிக்காக போராடினர். ரியாஸ் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சப்ராஸ் 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் 266 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!