கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதி ஆணைக்குழுவில் தற்சமயம் முன்னிலையாகியுள்ளார்
மட்டக்களப்பு புனானை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் 2015 முதல் 2018 ஆண்டு வரை இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தற்சமயம் முன்னிலையாகியுள்ளார்.
இதனுடன் குறித்த பல்கலைக்கழகத்தின் முகாமையாளரும் இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.(சே )