வாகரையில் வரட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவு

கனடா ரெயின் ரொப் பவுண்டேசனின் மாதா்  நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின்  மிகவும் பின்தங்கிய பாடசாலையான கட்டுமுறிவு அரசினா் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் துார பிரதேசத்தில் இருந்து கால்நடையாக கல்வி பயில வரும் மாணவா்களின் நலன் கருதி துவிச்சக்கர வண்டிகளும் கற்றல் உபகரணங்களும் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை உப அதிபா் ச.கருணைராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஆசிாியா்கள் மற்றும் பாடசாலை சமூகமட்ட ஆா்வலா்களும் கலந்து கொண்டனா்.குறித்த மாணவா்கள் பாடசாலைக்கு 4 கிலோ மீற்றா் துாரத்திற்கு அப்பால் இருந்தே கால் நடையாக வருவது வழக்கமாகும்.யானை தொல்லையுடன் கரடு முரடான பாதை வழியே இவா்கள் தங்களது  கல்வியினை  நாளாந்தம் மேற்கொண்டு வருகின்றனா்.

மேற்படி நிலமையினை கருத்தில் கொண்டு குறித்த கணடா அமைப்பு இவ் உதவியினை வழங்கியமைக்கு பாடசாலை நிா்வாகம் பாராட்டுக்களை தொிவித்து கொண்டது.

இதேவேளை வரட்ச்சியால் பொிதும் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு ஒரு தொகுதி உலா் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்க்பட்டது.

Recommended For You

About the Author: ருத்ரா

error: Content is protected !!