கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சில் நடந்த தாக்குதல்களில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய சந்தேக நபர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
நியூசிலாந்து பள்ளிவாசலில் நடந்தப்படட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேரை கொலை செய்தது, 40 பேர் மீது கொலை முயற்சி, ஒரு பயங்கரவாத குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பிரென்டன் டாரன்ட் மீது பதியப்பட்டுள்ளன.
29 வயதாகும் ஆஸ்திரேலியரான பிரென்டன் சிறையில் இருந்து காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது வழக்கரிஞ்சர் வாதத்தை எடுத்து வைத்தபோது பிரென்டன் அமைதியாக அமர்ந்திருந்தார்.
நியூசிலாந்தில் பயங்கரவாத குற்றச்சாட்டு வைக்கப்படுவது இதுவே முதல்முறை.

இந்த தாக்குதலில் உயிர்த்தப்பியவர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்ற விசாரணைக்கு வந்திருந்தனர். பிரென்டன் வழக்கரிஞ்சர் ஷேன் டைட், பிரென்டன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மறுப்பு தெரிவித்த போது நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது
அடுத்த ஆண்டு மே மாதம் நான்காம் திகதி வரை விசாரணை நடக்கும் என தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி கேமரான் மாண்டெர், ஆகஸ்ட் 16-ம் திகதி நடக்கும் வழக்கு ஆய்வு விசாரணை நடைபெறும் வரை பிரென்டனை சிறையில் வைக்க நீதிபதி மாண்டர் வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டார்.
கடந்த வாரம், இந்த வழக்கின் சந்தேக நபர் குறித்த புகைப்படங்களை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது .(சே)