எமது அரசின் பிரதமர் மஹிந்த -கலாநிதி சரத் அமுனுகம

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச என கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரியவித்துளார்.

மேலும் எமது கூட்டணியை பொறுத்த வரையில் நாம் அனைவரும் மஹிந்த ராஜபக்க்ஷவையே பிரதமர் பதவிக்கே நிலை நிறுத்துவோம் என ஏகமனதாக தீமானித்துள்ளோம் ஜனாதிபதியாக, பிரதமராக ,நீண்ட கால பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பிரதமராக்குவோம் என குறிப்பிட்டார்.

அதே வேளை ஐக்கிய தேசிய கட்சியை எடுத்து கொண்டால் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே ஐ.தே கா வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யார் தமது பிரதமர் என்பதை பெயரிடாது தவிர்த்து வருவதை போகிறோம்.

ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெரும் பட்சத்தில் யார் ஐ.தே.காவின் பிரதமர் என பொது மக்கள் மிகவும் ஆவலாக உள்ளனர் ஆனால் இக் கேள்வியை சஜித் பிரேமதாச தவிர்த்தே வருகிறார் இதற்கு ஒரு பதில் கிடைத்துள்ளது அதாவது ஐ.தே.க அரசாங்கத்தில் தானே பிரதம மந்திரி என ரணில் விக்ரமசிங்க வெளிப்படையாக கூறியுள்ளார் என மேலும் தெரிவித்தார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!