விடுதலைப் புலிகளின் கருவி ஒன்று முல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி ஒன்று, முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனியார் காணி உரிமையாளர் ஒருவர், விவசாய நடவடிக்கைகளுக்காக, காணி ஒன்றை துப்புரவு செய்த போது, குறித்த கருவி மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கருவியில், த.வி.பு 055 என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் இதுபோன்ற நீர் எதிர்ப்பு மகெலன் கருவிகள், கடல் வழி பயணங்களின் போது பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால், 2009 ஆண்டிற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள், தரை மற்றும் கடல் வழி பயணத்தின் போது, ஈரூடாக தாக்குதல் இலக்குகளின் கணிப்பீட்டை பெறுவதற்கு, ஜி.பி.எஸ் நேவிகேட்டர் கருவிகளை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!