தேர்தல் மேற்பார்வை உத்தியோகத்தர்களுக்கான அறிவூட்டல்  நிகழ்வு

தபால் மூலம் வாக்களிப்புக்கள் நடைபெறும்  நிலையங்களில் தேர்தல் கண்காணிப்பு மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபடும்  உத்தியோகத்தர்களுக்கான அறிவூட்டல்  நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .

மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி  அலுவலகர் ஆர். சசீலன் ஒழுங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபரும் , மாவட்ட தேர்தல் அலுவலக அத்தாச்சி அதிகாரியுமான எம் .உதயகுமார் தலைமையில் இன்று காலை மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த அறிவூட்டல் நிகழ்வு தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலக அத்தாட்சி அதிகாரியுமான எம் .உதயகுமார் தெரிவிக்கையில்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி  தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தபால்மூலம் வாக்களிப்புக்கள் இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிப்பதற்காக 154 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திற்கான  வாக்களிப்புகள் நடைபெற்று வருகின்றது .

மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 154  நிலையங்களில் தேர்தல் கண்காணிப்பு மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபடும்  உத்தியோகத்தர்களுக்கு  தேர்தல் கண்காணிப்பு மேற்பார்வை நடவடிக்கை தொடர்பாக அறிவூட்டல்  வழங்கப்பட்டு, இன்றும் நாளையும்    நடைபெறுகின்ற தபால் மூல வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் கண்காணிப்பு மேற்பார்வை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என. தெரிவித்தார்.

 

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!