வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவது தடை

தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில்

கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்பொழுது தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுகின்றது.வருகிறது இந்த வாக்களிப்பை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செயற்படும் வாக்காளர்களை கண்டுபிடித்து விசாரணைக்கு உட்படுத்தி குற்றமிழைத்தவராக கருதப்படும் சந்தர்ப்பத்தில் 3 வருட கால சிறைத்தண்டணை விதிக்கப்படும்.மற்றும் இதற்கு உதவி வழங்குவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென என அவர் தெரிவித்தார். (se)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!