மலையகத்தை முன்னிலைப்படுத்திய மனோ கணேசனின் 10 அம்ச கோரிக்கைகள்!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் சார்பில், 10 அம்சக் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


அதனடிப்படையில், அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக மக்களுக்காக 10 உத்தரவாதங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில், அந்த 10 உத்தரவாதங்களையும் உள்ளடக்கி, தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவாதங்களாக,…

01). மலையக சமூக மேம்பாட்டுக்காக விசேட ஜனாதிபதி செயலணி.
02). மலையக தமிழ் குடும்பங்களுக்கு சொந்த உறுதியுடன் 7 பேர்சஸ் காணியும், அதில் வீடும் வழங்கப்படுவதை உறுதி செய்வோம்.
03). இந்த காணி வழங்களில் காணப்படும் அனைத்து நிர்வாக தடைகளும் நீக்கப்படும்.
04). தோட்டப்பகுதிகளில் 10 தேசிய பாடசாலைகள் அமைக்கப்படும்.
05). உயர் கல்விக்கான வாய்ப்பை மேம்படுத்த மலையக பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
06). தொழில் வலயங்களும், அவற்றுடன் தொடர்புற்ற தொழிற் பயிற்சி நிறுவனங்களும் தோட்ட பிரதேசங்களில் இங்குள்ள இளைஞர்களுக்காக அமைக்கப்படும்.
07). நாடெங்கும் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், மலையக தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான நன்னோக்கு எதிர்மறை திட்டம் நடைமுறையாகும்.
08). நாட்டின் ஏனைய பிரதேச சுகாதார சேவைக்கு ஒப்பான தரமான சுகாதார சேவையை தோட்டப்புறத்திற்கும் பெற்றுத்தருவோம்.
09). தோட்டத் தொழிலாருக்கு ஆயிரத்து 500 ரூபா நாளாந்த சம்பளம்.
10). ‘மலையக தமிழ் விவசாயி’ களாக, நிலையான வருமானம் பெற்றுக் கொள்வதற்காக, தனியார்ஃஅரச பெருந்தோட்டங்கள் மீள் கட்டமைப்பு செய்யப்படும். இந்த மலையக விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்களை விலைக்கு வாங்கி, தோட்ட நிறுவனங்களும், இந்த மலையக விவசாயிகளும் பங்காளர்களாகும், வெளிவாரி தொழில் முறைமை உத்தரவாதம் செய்யப்படும்.
என அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!