இயற்கை அனர்த்தம் ஏற்படும்போது பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பது இல்லை-மக்கள் விசனம்

பெருந்தோட்ட பகுதிகளில் இயற்கை அனர்த்தம் ஏற்படும்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவார்ணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைப்பது இல்லை என பதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனைய நகரம், கிராமங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்கள் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கும் வழங்க வேண்டும் என மக்கள் கொறிக்ககை விடுத்துள்ளனர்.

பெருந்ததோட்ட சமூகம் ஏனைய சமூகத்தை விட பொருளாதாரத்தில் பின்தள்ளியே காணப்படுகின்றனர் குடும்ப வருமானத்தை அதிகரித்து கொள்ள மாற்று திட்டங்கள் எதுவும் இல்லை பெரும் கஷ்ட்டத்துக்கு மத்தியில் 5000 தொடக்கம் 10000 வரை வருமானம் பெற்றுக்கொள்கின்றனர்.

மேலும் காலநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது வெள்ளத்தால் விவசாய நிலங்களும் அழிந்துள்ளன இவ்வாறான நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் கிடைப்பதில்லை மற்றும் பாதிக்கப்பட்ட நிலங்களை ஆராயவே கிராமசேவக பிரிவு,விவசாய சங்கம் ஆரம்பிக்கப்பட்டது அவற்றில் நடவடிக்கை மேட்கொள்வதும் இல்லை

இதேவேளை ஏனைய மாவட்டங்களில் உள்ள விவசாய சங்கங்களின் அதிகாரிகள் அனர்த்தம் இடம்பெற்ற இடங்களுக்கு சென்று ஆலோசனை வழகுவதுமட்டுமல்லாது நிவாரங்களும் வழகுகின்றனர் அனால் தோட்ட மக்களுக்கு எதுவும் வழங்குவதும் இல்லை அதிகாரிகள் பாரபட்சம் பார்ப்பதாக தெரிவித்துள்ர்கள் (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!