இரத்தினபுரியில் கோடீஸ்வரரை உருவாக்கியுள்ள அபிவிருத்தி லொத்தர்!     

அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகூடிய சுப்பிரி ஜயமல்ல பரிசுத்தொகையான 14.5 கோடியை ஒருவர் வெற்றியீட்டியுள்ளார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகூடிய ஆரம்ப சுப்பிரி ஜயமல்ல தொகையான 7.5 கோடி ஜயமல்லவுடன் கோடிபதி கப்ருக லொத்தர் சீட்டின் 513ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்ல தொகையான 14 கோடியே 50 இலட்சத்து 23 ஆயிரத்து 213 ரூபா அளவு பிரமாண்டமான ஜயமல்ல தொகையை இரத்தினபுரி – கொடகவெல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வென்றுள்ளார்.

வெற்றியீட்டிய லொத்தர் சீட்டை அபிவிருத்தி லொத்தர் சபையின் கொடகவெல விற்பனை முகவர் ஆர்.பி.சோமா பிரியந்தி விற்பனை செய்துள்ளார்.

கோடிபதி கப்ருக லொத்தர் சீட்டின் மூலம் 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை சுப்பிரி வெற்றியாளர்கள் எட்டு பேரை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!