தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விடக்கூடாது: அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்   

வட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விடக்கூடாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்ததால் தமிழர்கள் பாரிய இழப்புகளையும் பல்வேறு துன்பத்திற்கும் உள்ளானார்கள் என்று கூறினார்.

எனவே இந்த தேர்தலை சிந்தித்து அவர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க கூடிய கீழ்மட்ட மக்களின் வாழ்க்கையை நன்கு உணர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும் என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி என்பன ஏற்பாடு செய்த தேர்தல் கலந்துரையாடலின் பின்பு ஹற்றனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!