ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு இன்று உருவாக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 17 கட்சிகள் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு எனும் புதிய அமைப்பினை உருவாக்கியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தலைவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, உட்பட 17 அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்று ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தவிசாளர், உப தலைவர், பொதுச் செயலாளர், செயலாளர்கள் ஆகிய ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள், தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!