அரபிக் கடலிலுள்ள தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும்    

அரபிக் கடலிலுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதுடன், அத்துடன் சில தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகின்றது.

இந்நிலையில் அரபிக் கடலில் திருவனந்தபுரம் அருகே உள்ள கற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம், எதிர்வரும் நாட்களில் லட்சத்தீவை நோக்கி நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 20 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!