தபால் மூல வாக்குப்பதிவு – ஹற்றனில் ஆசிரியர்கள் ஆர்வம்

எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்காக அரச நிறுவனங்களில் தபால்

மூல வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமானது.

2 7தேர்தல் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பிற்கு கீழ்,பொலிஸ் அதிகாரிகளின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமானது. ஹற்றன் கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர்கள் தபால் மூல வாக்களிப்பை ஹற்றன் ஸ்ரீபாத வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

ஹற்றன் கல்வி வலையத்திற்கு உட்பட்ட 2,000 ஆரிசியர்கள் தபால் மூலம் வாக்கு பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தனர். வாக்களிப்பு ஆரம்பமானதுடன் ஆசிரியர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!