கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனைத்தொடுவாய் கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் 80 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது.
பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் கல்பிட்டியை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட படகு ஒன்றும் அதற்கான இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சுமார் 80 கிலோ கிராம் எடையுடைய 40 கஞ்சா பொதிகளை கடற்படையினரின் உதவியுடன் பளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.