மட்டு,மண்முனை மேற்கு, வவுணதீவில், அனர்த்த முன் ஆயத்த வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச அனர்த்த முன் ஆயத்த வேலைத்திட்டங்கள் பற்றிய கூட்டம், பிரதேச செயலகத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலார் எஸ்.சுதாகர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது இப் பிரதேசத்தில் சேவையாற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மட்ட முன் ஆயத்தக் குழுக்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன் செய்யவேண்டிய ஏற்பாடுகள் பற்றியும், அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அதன் பின்னரான செயற்பாடுகள் என்ன. என்பதுபற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சியாத், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா, உன்னிச்சை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி போன்றோரும் கலந்துகொண்டனர்.

தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் இப் பிரதேசத்தில் உள்ள கன்னங்குடா, கரையாக்கந்தீவு, மண்டபத்தடி, கொத்தியாபுலை, கரவெட்டி, மகிழவட்டவான், பன்சேனை போன்ற கிராமங்கள் வெள்ள அனர்த்தம் அதிகம் ஏற்படும் கிராமங்களாகும்.

இக் கிராமங்கள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!