ஓவியக்கண்காட்சி, சஞ்சிகை வெளியீடு

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு களுதாவளை பொதுநூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் ஓவியக்கண்காட்சியும், விழிமின் சஞ்சிகை வெளியீட்டு விழாவும் களுதவாளை பொதுநூலக வாசகர் வட்டத்தின் தலைவர் கலாநிதி சு.சிவரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் கலந்துகொண்டார்.

அத்துடன் மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஷ், மூத்தஎழுத்தாளர் ஆ.மு.சி.வேலழகர், பிரதேச சபை உறுப்பினர்கள், மன்றங்கள், சங்கங்கள், ஆலயங்கள், கழகங்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் பேச்சு, நடனம், போன்ற பல்வேறு ஆற்றுகைகள் நடைபெற்றதுடன், நவீன வாழ்வியலைப் பிரதி பலிக்கக்கூடியதான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அத்துடன் நூலகத்தின் சார்பில் விழிமின் சஞ்சிகையும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!