சமூக ஊடக முறைகேடு 162 முறைப்பாடுகள்

சமூக ஊடகங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் 162 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளில் 66 முறைப்பாடுகள் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களை அவமதிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 6 முறைப்பாடுகள் ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களை பயன்படுத்தி போலியான சமூக ஊடக கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்களை இலக்காக கொண்ட உண்மைக்கு புறம்பான செய்திகள் தொடர்பில் 41 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

குரோத கூற்றுக்களை பரிமாறுவது தொடர்பில் 43 முறைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயரைப் பயன்படுத்தி போலி இணையத்தள முகவரி தொடர்பிலும் ஒரு முறைப்பாடு பதிவாகியுள்ளது. 139 முறைப்பாடுகள் முகப்புத்தக இணையத்தளம் தொடர்பிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. யூ டூ ப் சமூக இணையத்தளத்தில் வெளியான விடயங்கள் தொடர்பில் 23 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!