டீ 20 கிரிக்கெட் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலிய  தொடரை கைப்பற்றியது .

ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. இலங்கை அணியில் மூன்று மாற்றமாக பனுக ராஜபக்ச ஒஷாடா பெர்னாண்டோ, கசுன் ரஜித ஆகியோர் நீக்கப்பட்டு அவிஷ்க பெர்னாண்டோ, நிரோஷன் டிக்வெல்ல, உதனா சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல்க்கு பதிலாக ஸ்டான்லேக் இடம் பிடித்தார்.

இதில் டோஸ் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல். குசல் பெரேரா (27 ஓட்டங்களுடன் ), குணதிலகா (21ஓட்டங்களுடன் ) ஆகியோரைத் தவிர வேறு எந்த துடுப்பாட்டக்காரர்களும் 20 ஓட்டங்கள் கூட தாண்டவில்லை. முடிவில்இலங்கை அணி 19 ஓவர்களில் 117நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டான்லேக், கம்மின்ஸ், ஆஷ்டன் அகர், ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் (0) மலிங்கவின் முதல் ஓவரிலேயே விக்கெட் காப்பாளர் குசல் பெரேராவிடம் பிடிகொடுத்து ஆடம்மிளந்தார் இதன் பின்னர் டேவிட் வார்னரும், முன்னாள் தலைவர் ஸ்டீவன் சுமித்தும் கைகோர்த்து அரைசதம் எடுத்தனர் ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 118ஓட்டங்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வர்னர் 60 ஓட்டங்கள் 41 பந்துகளில் 9 பவுண்டரி ஸ்டீவன் சுமித் 53 ஓட்டங்கள் 36 பந்துகளில் 6 பவுண்டரி) அடங்களாக ஓட்டங்களை பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!