ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்கு பதிவு இன்று

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்கெடுப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.

காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அரச அதிகாரிகள் தமது வாக்குகளை பதிவு செய்யமுடியும் என தெரிவித்துள்ளது.

மேலும் மாவட்ட செயலகங்கள்,தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகிய நிறுவனங்களில் சேவையாளர்கள் தபால் வாக்காளர்களின் தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக 7,920 வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தபால்மூல வாக்கெடுப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்தார்.

தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றும், நாளையும் வாக்களிக்க முடியாதவர்களுக்கு நவம்பர் மாதம் 7ஆம் திகதி தெரிவத்தாட்சி அலுவலகங்களில் வாக்குகளை செலுத்த முடியும் என சமன் ரட்நாயக்க குறிப்பிட்டார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!