தமிழ்மொழி டிப்ளோமா  கற்கை நெறியினை நிறைவு செய்த உத்தியோகத்தர்கள்

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் தமிழ் மொழி  டிப்ளோமா பயிற்சிக் கல்லூரியின்  பொலிஸ் உத்தியோகத்தர்கள்  மற்றும் விசேட அதிரடி படையினர்   (30.10.2019) மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ  மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டனர்

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் கீழ் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு  பிரதி பொலிஸ் மா  அதிபர்  சஞ்சீவ தர்மரத்னவின் வழிகாட்டலின் கட்டான பொலிஸ் சேவைக்கால மற்றும் தமிழ் மொழி பாட  நெறிக்கான பணிப்பாளர்  உதவி பொலிஸ் அத்தியட்சகர் எ எஸ் பி நூர்தீன்  தலைமையில் ஆறுமாதம்  நடாத்தப்பட்ட தமிழ்மொழி டிப்ளோமா  கற்கை நெறியினை நிறைவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்  மற்றும் விசேட அதிரடி படையினர் மட்டக்களப்பு  தமிழர்களின் கலை , கலாசாரம் , பண்பாடு மற்றும் சமய வழிபாடுகள்  போன்ற விடயங்களை கற்றுக்கொள்ளும் நோக்கில் மட்டக்களப்பு நகர் பகுதியில்   மேற்கொண்டுள்ளனர் .

இதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ  மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு , ஆலயத்தில் இடம்பெறுகின்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டனர்  .

இந்த கலாசார சுற்றுலா விஜயத்தில் தமிழ் மொழி பாடநெறி ஆசிரியர்களான  ஐ பி .கே சிவானந்தன்  உட்பட     ஆசிரியர்கள்  , தமிழ் மொழி  பயிற்சிக் கல்லூரி    பொலிஸ் உத்தியோகத்தர்கள்  மற்றும் விசேட அதிரடி படையினர்  கலந்துகொண்டனர்

 

 

 

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!