கலாசார அதிகார சபை 2019 ஆம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு தெரிவு

மாவட்ட கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாசார அதிகார சபை 2019 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யும் ஒன்றுகூடல் நிகழ்வு  (30.10.2019)  மாலை   மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

2016ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆரம்பிக்கப்பட்ட மாவட்ட கலாசார அதிகார சபை மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்  2019 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யும் ஒன்றுகூடல் நிகழ்வு  மாவட்ட அரசாங்க அதிபரும் ,மாவட்ட கலாசார அதிகார சபையின் தலைவருமான எம் .உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .

இக் கூட்டத்திற்கு உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் பிரதேச செயலாளர்கள் உதவி பிரதேச செயலாளர்கள் இஸ்லாமிய கலாசார உத்தியோகத்தர் செயினுஸ் ஆப்தின் மற்று கலாசார திணைக்களத்தின் உத்தியோகத்தர் கலந்துகொண்டனர்.

இன்று புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகமானது மூன்று ஆண்டுகள் காலத்தினை  கொண்டிப்பதோடு இதன் நிறைவேற்று பணிப்பாளர் சபையின் தலைவராக பதவி வழியாக அரசாங்க அதிபர் இருப்பதுடன் உபதலைவராக ச.கனேசமூர்த்தியும் செயலாளராக வை.லோகிதராஜாவும் பொருளாளராக ந.துஜோகாந் ஆகியோர் ஏகமனதாக எவ்வித போட்டியும் இன்றி மாவட்ட கலாசார அதிகாரசபையின் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்

இன்று நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் அரசாங்க அதிபர் மா. உதயகுமார் உரையாற்றுகையில்  இந்த  மாவட்டமானது பல் இன கலாச்சாரத்திணை கொண்ட மாவட்டமாகும்.  அந்த வகையில் நல்ல தொரு கலாசார விழுமியங்களுக் கூடாக நல்லினக்கத்தினை கட்டியெலுப்பும் வகையில் இந்த மாவட்ட கலாசார சபை ஆக்கப்பட்டு சிறந்த கலாசார சமூகத்தினை கட்டியெலுப்புதல் வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.

 

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!