ஐந்து தமிழ் கட்சிகள் இன்று முக்கிய சந்திப்பு – தபால் மூல வாக்கை கட்டாயம் செலுத்துங்கள்!!

ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவராத நிலையில், தபால் மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு, தமிழ் மக்களைக் கோர முடியாத காரணத்தினால், தமிழர்கள் தமது வாக்குரிமையைப் தவறாது பிரயோகிக்க வேண்டும் என, ஐந்து தமிழ்க் கட்சிகளும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

ஐனாதிபதித் தேர்தலில் ஐந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள பொது ஆவணத்தின் அடிப்படையில், ஐந்து கட்சிகளுக்கும் இடையிலான கூட்டமொன்று யாழப்பாணம் பரமேஸ்வரா பகுதியில் இன்று மாலை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், தொடர்ந்தும் கூடி இறுதி முடிவை எடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்தின் பின்னர், ஐந்து கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாக, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் செயலாளர் சிறீகாந்தா, வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாகபல்கலைக்கழகமாணவர்கள் தெரிவித்துள்ளதாவது..

ஐந்து கட்சிகளாலும் உடன்பட்டு அவர்கள் சம்மதத்துடன் தயாரிக்கப்பட்ட இன்றைய கூட்டத்தின் இறுதி அறிக்கையை நாங்கள் தெரிவிக்கின்றோம். அதாவது தமிழ்த் தேசியப்பரப்பிலுள்ள ஐந்துகட்சிகளும் இன்றைய தினம் கூடி.

நாம் எதிர்நோக்கியிருக்கும் ஐனாதிபதித் தேர்தல் சம்மந்தமாகதொடர்ந்தும் கலந்துரையாடியுள்ளோம்.

தேர்தலில் போட்டியிடும் அனைத்துவேட்பாளர்களதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத சூழ்நிலையில் நாளைய தபால் மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு நாம் தமிழ் மக்களைக் கோரமுடியாது.

ஆயினும் தமிழ் வாக்காளர்கள் தமது வாக்குரிமையினை தவறாது பிரயோகிக்க வேண்டும் என்று நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். மேலும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளவராத பட்சத்தில் ஒரு முடிவை எடுக்க முடியாமல் உள்ளது.

ஆயினும் வேட்பாளர்களது விஞ்ஞாபனம் வெளியாகிய பின்; மீண்டும் கூடி முடிவை எடுப்போம். அதேநேரம் இதனை ஏற்பா செய்தவர்கள் என்ற அடிப்படையில் மாணவர் ஒன்றியமாக எங்கள் நிலைப்பாட்டையும் நாம் அறிவிப்போம் என மாணவர்கள் மேலும் தெரிவித்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!