வடக்கு, கிழக்கு மக்கள் சஜித்திற்கே வாக்களிப்பார்கள் – அஜித் பி பெரேரா!!

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ஒருபோதும் எந்தவொரு தரப்பினருடைய நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என, அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று கொழும்பில் இடம்பெற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து, காணொளி ஒன்றை வெளியிட்டு அம்பலப்படுத்தல் ஒன்றை செய்யவுள்ளதாக, எம்மீது விமர்சனம் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் ஏதாவது ஒரு பொய்யை எதிரணி உருவாக்குகிறது.

கடந்த தேர்தலிலும் நாட்டைப் பிரிக்கும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டதாக குற்றஞ்சாட்ப்பட்டது. ஆனாலும் சஜித் பிரேமதாஸ என்பவர் யாருடைய நிபந்தனைக்கும் அடிபணியாதவர்.

வேட்பாளர் பதவியை பெற்ற போதும், அதேபோல தேர்தல் செயற்பாடுகளிலும் எந்தவித நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, சஜித் பிரேமதாஸவின் வார்த்தையில் நம்பிக்கை இருந்தால், அதனடிப்படையில் அரசியல் செய்வதே அவருடைய அரசியல் பாதையாகும்.

ஆகவே எந்தவொரு நிபந்தனைக்கும் அவர் அடிபணிவதில்லை என்பதோடு, எந்தவொரு இரகசிய ஒப்பந்தமும் செய்து கொள்ள மாட்டார். கடந்த முறை போலியான ஆவணங்கள்கூட வெளியிடப்பட்டன.

ஆகவேதான் சஜித் பிரேமதாஸ நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டார் என்பதை மக்கள் அறிவார்கள். வடக்கு மக்கள், சஜித் பிரேமதாஸவின் பிரசாரங்களில் கலந்து கொள்கின்றனர்.

இன பேதமின்றி அப்பாவி மக்களுக்கு, சஜித் பிரேமதாஸ உதவி செய்வதால், அவர்கள் சஜித்திற்கே வாக்களிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. எந்தவொரு அரசியல் இயக்கத்திற்கும், வடக்கு தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிப்பதை தடுத்து விட முடியாது.

அதேபோல தேர்தலை பகிஷ்கரிக்கச் செய்யவும் முடியாது. இப்;படியிருக்கும் நிலையில் சூழ்ச்சிகளை செய்து, கோட்டாபயவை தோற்கடிக்க முயற்சி இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

அப்படி செய்வதற்கு எமக்கு அவசியமில்லை. கோட்டாபயவின் இறந்த, நிகழ் மற்றும் எதிர்காலத்தை அம்பலப்படுத்தினாலே போதும். மக்கள் எமக்கே வாக்களிப்பார்கள்.

அவருடைய வேலைத்திட்டம்தான், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது. ஆகவே நாட்டைப் பிரிக்கின்ற தலைவர் இனியும் வேண்டாம். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!