பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடக மாறிவிட்டது-அனுர குமார திஸாநாயக்க

நாட்டில் தற்போது பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதிவேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க
தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

நாட்டில் பல்கலைக்கழகங்களில் 70 சதவீதம் பெண்கள் கட்கையில் ஈடுபடுகிறார்கள் அதில் 31 சதவீதமானவர்களே தொழில் செய்கிறார்கள் என தெரிவித்தார்

மேலும் நாள் ஒன்றுக்கு 638 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன, 90 சதவீதமான பெண்கள் பொது போக்குவரத்தில் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகிறது அதில் நூற்றுக்கு 70 சதவீதமானவை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது ஆகவே பெண்களுக்கு பாதுகாப்பற்ற வாழ்வொன்று ஏற்பட்டுள்ளது  .என தெரிவித்தார்

பெண்கள் இச்சமூகத்தில் பாரியளவில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இதற்காக புதிய அரசியல் ஒன்று தேவை எல்லோரும் சமத்துவத்துடனும் சுதந்திரத்துடனும் வாழக்கூடிய நாடு ஒன்றை நாம் உருவாக்க வேண்டும் கடந்த 71 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் அவ்வாறான நாட்டை உருவாக்க வில்லை என மேலும் அவர் தெரிவித்தார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!