ஐ.எஸ் தலைவரை கொல்வதற்கு காரணமாக இருந்த நாயின் ஒளிப்படம் வெளியீடு   

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கைது செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த அமெரிக்க இராணுவ மோப்ப நாயின் ஒளிப்படத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியை பிடிப்பதற்கும், கொல்வதற்கும் காரணமாக இருந்த அற்புதமான இராணுவ மோப்ப நாயின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளோம்’ என பதிவிட்டிருந்தார்.

ஐ.எஸ் தலைவரை பிடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்காவின் இராணுவ நாய்க்கும் காயம் ஏற்பட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுருந்தன.

இதனை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஐ.எஸ் தலைவரை பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நாயின் பெயரை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக இதுவரை வெளியிடவில்லை.

முன்னதாக கடந்த 3 வருடங்களாக தீவிரமான கண்காணிப்பிலும், தேடுதலிலுக்கும் உட்பட்டிருந்த ஐ.எஸ் தீவிரவாத தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி, சிரியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப்பிரிவினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் உயிரிழந்தார்.

இதில் அவரது 2 மனைவிகள், 3 பிள்ளைகள், நண்பர்கள் பலர் உயிரிழந்தனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஸ்தாபக தலைவரான அபுபக்கர் அல்-பக்தாதி. சிரியாவில் இஸ்லாமிய அரசை ஸ்தாபிப்பதற்காக புனிதப் போர் தொடுக்க வேண்டும் என்று கூறி பல தரப்பினரையும் அழைத்துச் சென்று மூளைச்சலவை செய்து பிரச்சாரம் செய்து வந்தார்.

இதனால் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு தீவிரவாத செயலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!