இந்தியாவில் முதலிடுமாறு சவுதி அரேபிய நிறுவனங்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு   

உத்தியோகபூர்வ விஜயமாக சவுதி அரேபியா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சவுதி அரேபிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக சவுதி அரேபியா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவில் இடம்பெறும் எதிர்கால முதலீட்டு முன்னெடுப்பு கருத்தரங்கில் உரையாற்றும்போதே இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 100 பில்லியன் டொலரை, எண்ணெய் சுத்திகரிப்பு போன்றவற்றில் இந்தியா முதலீடு செய்யும் என்று கூறினார்.

சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தொழில் தொடங்குவதற்கு ஏதுவான நாடுகளில், உலகளவில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவித்த நரேந்திர மோடி, சர்வதேச முதலீட்டாளர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!