முறையாக வாக்கு பதிவு செய்வது எப்படி-தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கு பதிவு செய்வது எப்படி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தௌிவுபடுத்துகிறார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

மேலும் வாக்கு பதிவின்போது தயவு செய்து புள்ளடி( x) க்கு பதிலாக இலக்கம் ஒன்றினை (1) பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்

வரும் ஜனாதிபதி தேர்தலில் 3 வேட்பாளர்களை தெரிவு செய்யலாம் ஆகவே x குறியீட்டுக்கு பதிலாக இலக்கங்களை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்

வாக்காளர்கள் தனது விருப்பத்தின் பேரில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னத்திற்கு அருகில் வரும் சதுரத்தில் வரிசை கிரகமாக 1 2 3 என வாக்குகளை பதிவு செய்ய முடியும் என தெரிவித்தார்

ஒரு வேட்பாளருக்கு மட்டும் வாக்களிப்பதாயின் இலக்கம் ஒன்றிற்கு பதிலாக வழமையாக பயன்படுத்தப்படும் புள்ளடி( x) பயன்படுத்தி இருந்தலும் குறித்த வாக்கு செல்லுபடியானதாக ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார். (se)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!