தனது நிர்வாகத்தின் கீழ் தேசிய அபிவிருத்தி திட்டம்-சஜித்

தனது நிர்வாகத்தின் கீழ் ஒரு தேசிய அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தப் போவதாகக் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்

நாட்டில் உள்ள அனைத்து பிரதேச சபை அலுவலகங்களிலும் ஜனாதிபதி அபிவிருத்தி பிரிவொன்றை ஏடற்படுத்தி , அனைத்து தேர்தல் பிரிவுகளிலும், அனைத்து பிரதேச செயலக பிரதேசங்களிலும் பொதுமக்களின் தனிநபர் பிரச்சனைகளை தெரிவிக்க, பொது ஆலோசனை முன்வைக்க எனது தனிப்பட்ட அதிகாரிகள் குழுவொன்று பிரதேச செயலகங்களில் நிறுவப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக நிச்சயமாக பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்வு காண ஜனாதிபதியாக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என மேலும் தெரிவித்துள்ளார் (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!