புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு       

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளைய தினம் மாநாயக்க தேரர்கள் முன்னிலையில் கண்டியில் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் தமது தேர்தல் விஞ்ஞாபனம் அமையும் என்று லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகார பகிர்வே தமது நோக்கம் என்றும், இதில் கோரிக்கைகளை ஏற்க அவசியமில்லை என்றும், தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கும் அப்பால் தமிழ் மக்களின் ஆதரவு தமக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளைய தினம் வெளியிடப்படவுள்ள நிலையில் தமது தேர்தல் விஞ்ஞாபனம் குறித்தும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டில் சகல பகுதிகளிலும் இதுவரை தாம் முன்னெடுத்த பிரசார கூட்டங்களில் மக்களின் ஆதரவு அதிகமாக இருந்ததாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளைய தினம் காலையில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

முதல் பிரதி மாநாயக்க தேர்கள் முன்னிலையில் வழங்கப்படும் என்றும், அதேபோல் கண்டியில் பாரிய அளவில் தமது மக்கள் கூட்ட நிகழ்வில், தமது முழு தேர்தல் விஞ்ஞாபனம் படிவமும் வெளிப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடடுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சகல மக்களும் ஏற்றுகொள்ளும் ஜனநாயக ரீதியிலான திட்டங்களே முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!