முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலக முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று சிறப்பாக இடம்பெற்றன.
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் றஞ்சனா நவரத்தினம்; தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டார்.
அத்தோடு, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் மற்றும், ஓய்வு நிலை அதிபர் அ.தனிநாயகம் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் சாதனை படைத்த பாண்டியன் குளம் மகாவித்தியாலய மாணவி இளங்கோவன் ஜீவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வதியும் க.சங்கரப்பிள்ளை என்ற முதியவர் மதிப்பளிக்கப்பட்டதுடன் முதியோரிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முதியோர்கள், சிறுவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொணடிருந்தனர்.