ஜனாதிபதி வேட்பாளர்களால் மக்களுக்கு வழங்கப்படும் உறுதிமொழிகள் மற்றும் தேர்தல் பிரகடனங்களில் சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய தமது கொள்கைகளையும் அவர்கள் தெளிவாக குறிப்பிட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா 2019 கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் நேற்று நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகெங்கும் இடம்பெறும் சுற்றாடல் மாசடைதல் இன்று மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களினதும் இருப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருப்பதனால் அரசியல்வாதிகளின் கொள்கை பிரகடனத்தில் சுற்றாடல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.