வவுனியா வளாக தொழில்நுட்ப பீட பரீட்சைகள் பிற்போடப்பட்டன   

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் தொழில்நுட்பபீட மாணவர்களிற்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கும் தொழில்நுட்பபீட மாணவர்கள் சிலர் நேற்றிரவு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள வளாகத்தின் நிர்வாக பணிமனையை முற்றுகையிட்டனர்.

அங்கு தங்கியிருக்கும் தங்களில் சிலருக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதால் இடம்பெறவிருக்கும் பரீட்சைகளை இடைநிறுத்துமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

இந்நிலையில் வளாகத்தில் கடமையில் இருந்த அதிகாரிகளிற்கும் மாணவர்களிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது அவர்களது கோரிக்கைகளிற்கு ஏற்ப பரீட்சைகள் பிற்போடப்படுவதாக அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

அதன் பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

இதன்போது வவுனியா பொலிஸாரும் குறித்த பகுதிக்கு வருகைதந்திருந்ததுடன் மாணவர்களுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!