தபால் வாக்கு பதிவு நாளை

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது.

அதன்படி, அரசு நிறுவனங்களின் மற்றும் இராணுவத்தின் தபால் வாக்காளர்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் வாக்களிக்க உள்ளனர்.

மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தபால் வாக்காளர்களின் தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தினத்தில் தபால் வாக்களிப்பினை மேற்கொள்ள முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 07 ஆம் திகதி வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது .

அதன்படி, தமது சேவை நிலையம் அமைந்துள்ள மாவட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் எதிர்வரும் 07 ஆம் திகதி தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என தேர்தல் ஆணைகுழு தெரிவித்துள்ளது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!