புகையிரதம் மோதி மாடுகள் உயிரிழப்பு!          

தலைமன்னாரில் இருந்து இன்று காலை 7.10 மணியளவில் மதவாச்சியூடாக கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதி 4 மாடுகள் உயிரிழந்துள்ளன.

குறித்த சம்பவம் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று காலை 8.25 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

விபத்தை தொடர்ந்து புகையிரதம் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் பயணிகளுடன் மதவாச்சி நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் தொடர்ச்சியாக மாடுகள் மோதி உயிரிழக்கும் சம்பவம் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!