கொழும்பு துறைமுக நகரின் காணி குத்தகை ஒப்பந்தம்: சீன நிறுவனத்திடம் கையளிப்பு       

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் செங் சுவான் ஆகியோரின் முன்னிலையில் கொழும்பு துறைமுக நகரத்தின் காணி குத்தகை ஒப்பந்த பத்திரத்தை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

ஜனாதிபதி மற்றும் சீன தூதுவரின் முன்னிலையில் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவினால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எஸ்.வி.ரத்நாயக்கவிடம் உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யு.டபிள்யு.கருணாரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!